திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது, இதனை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதனை தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரம் முன்பு விநாயகர், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர், அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.