அண்ணாமலையார் கோவிலில் வானதி சீனிவாசன் தரிசனம்

64பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் வானதி சீனிவாசன் தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: 'திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். கிரிவல பாதையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதியை அதிகரிக்க வேண்டும். பவுர்ணமிக்கு மட்டும் கழிப்பறைகளைத் திறந்து வைக்கின்றனர். அனைத்து நாட்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். பக்தர்களுக்கு தங்கும் வசதி, அன்னதானம் வழங்க வேண்டும்.

ராஜகோபுரம் எதிரே நீதிமன்ற தடையாணையால், வணிக வளாகம் கட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ராஜகோபுர தரிசனத்தை தடுக்கும் வகையில் திராவிட மாடல் அரசு இருக்கக் கூடாது. தமிழகத்தில் கோயில் குடமுழுக்கு விழாக்கள் பக்தர்களின் உண்டியல் காணிக்கையில் இருந்துதான் நடத்தப்படுகிறது. அரசின் பணத்தில் அல்ல. சனாதன தர்மத்துக்கும் இந்து மக்களுக்கும் எதிராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது கிடையாது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ஊழல் பணத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி