திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இஆப. , இன்று (30. 07. 2024) இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்கள். இம்முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி ஆகியோர் உடனிருந்தனர்.