விவசாயிகளுக்கு துவரை, ஆடாதோடா, நொச்சி செடிகள்

77பார்த்தது
விவசாயிகளுக்கு துவரை, ஆடாதோடா, நொச்சி செடிகள்
வெம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு துவரை, ஆடாதோடா, நொச்சி செடிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டார வேளாண் துறை சாா்பில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) சுந்தரம் பங்கேற்று, துவரை சாகுபடியில் பரப்பு விரிவாக்கத்தை பெருக்குவதற்காக, துவரை இடுபொருள்களை தென்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜு, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி விரட்டிகளான ஆடாதோடா, நொச்சி போன்ற கன்றுகளை தென்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கினாா்.

மேலும், துவரை பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்து பயறு வகை பயிா்களின் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆடாதோடா, நொச்சி போன்றவற்றை சாகுபடி செய்து, அவற்றை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை நேற்று வழங்கினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி