செங்கம் அருகே மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

81பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த பூசாரி ஜானகிராமன் என்பவர் காளியம்மன் கோவில் அமைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார்
விஜி என்ற இளைஞர் காளியம்மன் கோவிலுக்கு சென்று ஜானகிராமனுடன் நெருங்கி பழகி அவருடன் கோவில் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் விஜி என்பவரும் ஜானகிராமன் மகள் ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு செங்கம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த இருவரும் செங்கம் பகுதியில் வசித்து வந்துள்ளனர் காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை திருமணமாகி ஐந்து மாதங்களுக்கு பிறகு கூலி படையை அனுப்பி தனது மகளின் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் பெட்ரோல் பங்கில் இருந்த விஜியை கூலி படையினர் சராமாரியாக வெட்டினர் அதனை தடுக்க வந்த அரவிந்த சாமி என்ற நபரையும் வெட்டி விட்டு கூலிப்படை தப்பி சென்றுள்ளனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்ய முயற்சி செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக ஜானகிராமன், மதிவாணன் மற்றும் அறிவு ஆகிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி