சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

76பார்த்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனிமாத பிரமோற்சவ விழா. தமிழ் மாதங்களில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என்றும், ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயணத்தை முன்னிட்டு மார்கழி மாதத்திலும், தட்சிணாயனத்தை முன்னிட்டு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அதன்படி தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி ஆனிமாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடைதிறக்கப்பட்ட அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, வரும் 16ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் உற்சவ மூத்திகள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்புடைய செய்தி