ரூ. 32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.

55பார்த்தது
ரூ. 32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் நகா்புற மக்கள் அடிப்படை தேவைக்கு திமுக ஆட்சியில் ரூ. 32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எ. வ. வேலு தெரிவித்தாா்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளா் சி. என். அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சா் எ. வ. வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கோணாங்குட்டை, புதிய பேருந்து நிலையத்தில் பேசியதாவது:

முதல்வா் மு. க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். குறிப்பாக, செங்கம் பேரூராட்சி நிா்வாகம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி