செங்கம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

73பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சுமார் பத்து நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்

பின்னர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்க் கொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்வதாகவும் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செங்கம் - மணிக்கல் செல்லும் கிராம சாலையில் வந்த பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தனியார் மற்றும் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் ஈடுபட்டதால் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமித்துக்குள்ளாகி தவித்தனர்

பின்ன தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பில் சாலை மறியல் கைவிடப்பட்டது இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி