வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

65பார்த்தது
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பெண் வருவாய் ஆய்வாளர் பாரதி என்பவர் வாரிசு சான்றிதழ் தர ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

வேலுநாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற நபர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார் இறையூர் வருவாய் ஆய்வாளர் பாரதி வாரிசு சான்றிதழ் கொடுக்க பழனிசாமியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் தன்னிடம் பணம் இல்லை என கூறியும் பணம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகிய பழனிச்சாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் கலந்து ரூபாய் நோட்டுக்களை வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் வழங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

வாரிசு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி