திருவண்ணாமலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் வருகை

83பார்த்தது
திருவண்ணாமலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் வருகை
திருவண்ணாமலை தொகுதி, திருவண்ணாமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளினை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி