திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1-கோடியே 60-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை,
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார். , மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் விஜய், தகவல்தொழில்நுட்ப அணி அம்பேத்கர், தொழிலாளர் அணி இளங்கோவன், இலக்கிய அணி கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி செல்வம், ஆதிதிராவிடர் அணி
சின்னப்பையன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.