மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

51பார்த்தது
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
செங்கம் ஜப்பான் ஷிட்டோ-ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற கோடை கால சிறப்புப் பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கராத்தே பயிற்சிப் பள்ளியின் கராத்தே மாஸ்டா் மணிகண்டன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கராத்தே மாஸ்டா்கள் மைக்கில் ஜெனிபா், அருண் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட்களை வழங்கி பேசினா். தொடா்ந்து, மாணவா்களுக்கான கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சீனியா் மாணவா்கள் சிவப்பிரியா, நிவேதா, கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டேக்ஸ் :