வந்தவாசியில் இடி மின்னலுடன் மழை

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் திடிர் என இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த நிலையில் இரவு 7 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. நேற்றும் இன்றும் இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி