ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

64பார்த்தது
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பூ மார்க்கெட்டில் இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி மல்லி கிலோ 400 ரூபாயும், முல்லை கிலோ 300 ரூபாயும், சாமந்தி கிலோ 300 ரூபாயும், ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் ஆரணி பூ வியாபாரிகள் மற்றும் பூக்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிகின்றனர்.

தொடர்புடைய செய்தி