திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விளாங்காடு கிராமத்தில் ராஜகுமாரி, காத்தவராயன், பொன்னூர் எல்லம்மாள் ஆகியோர் இணைந்து நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று விவசாய கிராமப்புற மக்களுக்கு வழங்கியுள்ளனர். வழங்கிய கடன்களை வசூலிக்கும் பொழுது அடாவடித்தனமாகவும், நிர்ணயிக்கப்பட்ட வட்டி தொகைகளை விட கூடுதலாக பெற்றதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் கடன் செலுத்தாதவர்களை ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவது, குண்டர்களை வைத்து தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனை கண்டித்து வந்தவாசி தேரடி பகுதியில், அஞ்சல் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் உதயகுமார், மாரிமுத்து ஆகிய தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.