திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி, ஆரணியை அடுத்த சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயிலில் அருணகிரிநாதா், நந்திதேவா்ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அலங்கார ரூபத்தில் அருணகிரிநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோன்று, பழம்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரா் கோயில், அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரா் கோயில், கோனாமங்கலம் மங்களாம்பிகை சமேத பசுபதீஸ்வரா் கோயில், நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீா்க்காஜலஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில்
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.