கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் புதியதாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.