கலைஞர் நாணயங்களை திமுக வீசி எறியுமா? - அன்புமணி கேள்வி

62பார்த்தது
கலைஞர் நாணயங்களை திமுக வீசி எறியுமா? - அன்புமணி கேள்வி
₹ அடையாளத்தை நீக்கியுள்ள திமுக, கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை வீசி எறிந்து விடுமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி