திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி, முதலமைச்சர் தனிப்பிரிவு செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து உடனடி தீர்வு கண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி இத்திட்டத்தின் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் D. ராஜி, ஒன்றிய செயலாளர்கள் N. சங்கர், JK. சீனிவாசன்,
M. தினகரன், A. ஞானவேல், மாவட்ட அயலக அணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தெய்வமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.