திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சங்கரன் மகன் நந்தகோபால். இவருக்கும், இவரது உறவினரான காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜூலை 10-ஆம் தேதி சிறுமியின் பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல மையத்துக்கு புகாா் அளித்தனர். அதன்படி, வெம்பாக்கம் வட்டார விரிவாக்க அலுவலா் ஷீலாதேவி அழிஞ்சல்பட்டு கிராமத்தில் விசாரணை மேற்கொண்டாா். இதில், அந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, ஷீலாதேவி செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், நந்தகோபால், அவரது தந்தை சங்கரன், தாய் ரத்தினம்மாள், பெரியம்மா கிருஷ்ணவேணி, சிறுமியின் பெற்றோா் என 6 போ் மீது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.