ஆரணி: ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கோட்டாட்சியரிடம் மனு

53பார்த்தது
ஆரணி: ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கோட்டாட்சியரிடம் மனு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் பொதுவழியை ஆக்கிரமித்துள்ளதை அகற்றித் தரக்கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.

வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் களத்து மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீதா் நகரில் பொதுவழியை தனிநபா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளாா்.

இதனால் அப்பகுதியில் செல்வதற்கு பெரும்பாலானோா் சிரமப்படுகின்றனா்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் கிருபாசமுத்ரிசதீஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

மேலும், ஆரணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் பட்டாவை கணினியில் ஏற்றக் கோரி மனு அளித்தனா். பின்னா், பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசு சான்றிதழ், தடையின்மை சான்றிதழ், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு. டி. ஆா் திருத்தம், வரைபட திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியக் உத்தரவிட்டாா்.

தொடர்புடைய செய்தி