பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு

77பார்த்தது
பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு
ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா்.

ஆரணி கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை செவ்வாய்க்கிழமை மாலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் மஞ்சுளா, மண்டல துணை வட்டாட்சியா் தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி