திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
ஆத்து கிணத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள ஸ்ரீ மாயவன் பெருமாள்
ஸ்ரீ தேவி பூதேவி திருக்கோவிலில் திருமால்வாரம் எனப்படும் ஆறாவது சனிக்கிழமை முன்னிட்டு
இன்று மாயவன் பெருமாளுக்கு பால் தயிர் பன்னீர் மஞ்சள் குங்குமம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாயவன் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மேலும் முக்கிய நிகழ்வாக உற்சவர் கோவிலில் இருந்து ஊர்வலமாக தோப்புக்கு கொண்டு செல்லும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் கோவை சென்னை உடுமலை திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.