திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணை கிணறு ஆழ்குழாய் கிணறு மற்றும் பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பிஏபி பாசனம் மற்றும் பருவ மழையை ஆதாரமாகக் கொண்டு மானாவரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மக்காசோளம் அறுவடை கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒரு சில விவசாயிகளை தவிர மற்ற விவசாயிகள் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை கொண்டு வந்து களத்தில் காய வைத்து இ- நாம் திட்டத்தின் கீழ் நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 21-ம் தேதி முதல் இன்று வரை வரை ஒரு வாரத்தில் 237 டன் அளவுள்ள மக்காச்சோளம் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 310 முதல் ரூ. 2 ஆயிரத்து 2360 வரையில் ரூ. 56 லட்சத்து 22 ஆயிரத்து 148 க்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலமாக 33 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். இதனால் விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளத்தில் விற்பனை செய்து பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள்பயன்பெறுமாறு திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தெரிவித்து உள்ளார்.