உடுமலை: தென்னை நார் தொழிற்சாலையால் காலிபிளவர் பூக்கள் சேதம்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆத்துக்கிணத்து பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொள்ளு பாளையம் கிராமத்தில் விவசாயி சண்முகம் என்பவர் காலிபிளவர் மூணு ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்தனர் இந்த நிலையில் உரம் களை எடுத்தல் ஆட்கூலா பராமரிப்பு என பத்து லட்சம் வரை செலவு செய்திருக்கும் நிலையில் தற்போது அறுவடை சில தினங்களுக்கு முன் துவங்கியது இந்த நிலையில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ள பகுதியில் எதிரில்
செயல்பட்டு வரும்
தென்னை நார் தொழிற் சாலையில் இருந்து வெளிவரும் துகள்கள் காலிபிளவர் சாகுபடியை அடியோடு பாதிப்பல ஏற்படுத்தி உள்ளது இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ள மேலும் சந்தையில் விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் மூன்று ஏக்கருக்கு மேல காலிபிளவர் சாகுபடி செய்திருந்தோம் தற்போது அறுவடை நடைபெற்று வரும் வெள்ளை பூ தற்பொழுது சிவப்பு கலர் பூவாக மாறி வருகின்றது இதனால் உடுமலை தினசரி சந்தைகள் காலிஃப்ளவர் வாங்க மருத்து வருகின்றனர் மேலும் தற்பொழுது 3 ஏக்கர் பரப்பளவில் 16, 000 பூ மேல் தென்னை நார் துகள்கள் பரவல் காரணமாக தற்போது சிவப்பு நிறமாக மாறிவிடுவதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது
உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி