தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில கூட்டம்

53பார்த்தது
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் தா. வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா. கண்ணன் முன்னிலை வகித்தார்.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார் செய்த குழு அமைத்தல், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2. 0 தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் உள்ளீடு செய்தல், துணை வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கு வேளாண்மை தோட்டக்கலை அலுவலருக்கு இணையான ஊதியம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு வலியுறுத்துதல், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் போன்ற பல சங்கங்களை ஒருங்கிணைத்து ஊதியம் தொடர்பான நடவடிக்கை குழு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழகம் முழுவதில் இருந்து வந்திருந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதிதாக சங்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாவட்ட செயலாளர் அ. பாலு நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி