உடுமலை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

1076பார்த்தது
உடுமலை பகுதியில் உள்ள உடுமலை-சின்னார் சாலையில் ஆரியபவன் சிக்னல் முதல் போடிபட்டி அண்ணாநகர் லூர்து மாதா பள்ளி வரை, அதே போன்று ராஜேந்திரா சாலையில் தினசரி மார்க்கெட் முதல் தளிரோடு மேம்பால இணைப்பு வரை, மேலும் தாராபுரம் சாலையில் தாஜ் தியேட்டர் முதல் பஸ் நிலையம் ரவுண்டான வரை உள்ள பகுதிகளில் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு நேற்று (23-2-24) வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் இன்று முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல், விளம்பர
பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இதனால் உடுமலை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடுமலை பகுதியில் சாலைகளின் இரண்டு புறங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற பட்டுவருகிறது. மீண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

உடுமலைப்பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி