மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை இணைக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய திருமாவளவன், ஒப்புகை சீட்டினை வாக்குப்பெட்டியில் போட தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்; 100% ஒப்புகை சீட்டை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.