உடுமலையில் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கல்

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கட்டுரைப் போட்டி கவிதைப்போட்டி ஓவியப்போட்டி பாட்டு போட்டி பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது விழாவில் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் சுமார் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்

இந்த நிகழ்வில்
உடுமலை காமராஜர் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்பிரமணியம் , செயலாளர் ஆடிட்டர் வைரமுத்து, சட்ட ஆலசோகர் மன்மதராஜ் மற்றும் ஆடிட்டர் கண்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி