விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வருகிறது. அவர் கிரிமினல் என விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். ஒருவேளை கிரிமினல் தற்போது நல்ல ஆளாக மாறிவிட்டாரா? என்று தெரியவில்லை. நடிகர் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைக்க பாஜக முயற்சி செய்தது. அவர் வரவில்லை. அதற்கு பதிலாக விஜய்யை ஆரம்பிக்க வைத்துள்ளனர் என செய்திகள் வருகிறது” இவ்வாறு தெரிவித்தார்.