உடுமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!!

58பார்த்தது
உடுமலை அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில் சர்க்கரை நோயாளிகள் மற்றும் வெட்டு காயங்களுக்கு மருந்து கட்டும் இடத்தில் போதிய பணியாளர் இன்றி நோயாளிகளுக்கான சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மருந்து கட்டும் பணியாளர் அறைக்கு முன் பணம் ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும் கைச்செலவுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டே நோயாளிக்கான மருந்து கட்டும் பணி நடைபெறுகிறது. உதவியாளர் இல்லாமலோ பணம் கொடுக்காமலோ சிகிச்சை பெற வந்தால் இந்த பெண்மணிக்கு நடந்த சம்பவம் தான் அனுபவமாக கிடைக்கும். எனவே மருத்துவமனை நிர்வாகம் மருந்து கட்டும் பணியை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி பொது மக்களுக்கு இன்னல்கள் நேரா வண்ணம் காத்திட வேண்டுமாய் சமூக ஆர்வலர்களின் ஏக்கமாய் உள்ளது.
இந்த நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் மருந்து கட்டும் பிரிவில் நோயாளி ஒருவர் பாதிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி