திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை புதிதாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை மாவட்டமாக அறிவித்து இணைக்கப்படும் என கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்கள் மூலமாக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த செய்தி உண்மையா இல்லையா என தெரியாமல் உடுமலை பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று உடுமலை வியாபாரிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறும்போது, உடுமலை மடத்துக்குளம் பகுதி தற்சமயம் புதிதாக உருவாக்கப்படும் பழனி மாவட்டத்தில் இணைய போவதாக தகவல்கள் தீவிரமாக பரவி வருகின்றன. எனவே தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்டு உரிய முடிவெடுக்க வேண்டும்.
பழனி கூட இணைக்க கூடாது. மேலும் உடுமலையை மாவட்டமாக வேண்டும். தவறும் பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.