திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உடுமலை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரினர். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்த கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.