திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமராயப் பட்டியில் இன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன பந்தயத்தில் 200 400 என்ற இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் அடையும் இரட்டை மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி போட்டிகளை துவக்கி வைத்தார். ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற
இரட்டை மாட்டு வண்டி உரிமையாளருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில அமைச்சர் கயல்விழி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,
பொள்ளாச்சி ஈஸ்வரசுவாமி , ஈரோடு பிரகாஷ் , திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடுமலை அருகே நடைபெற்ற மாநில அளவிலான ரேக்ளா எனப்படும் இரட்டை மாட்டு வண்டி போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று கண்டு களித்தனர்