திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரன் பட்டி ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் இந்திரா நகர் என்னும் இடத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தாலும் குடிநீர் தொட்டியை பராமரிக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு ஒன்று அனுப்பி உள்ளனர்