கணக்கம்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

70பார்த்தது
உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது. உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை பெருந்தலைவர் மகாலட்சுமி , கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு ஆகியோர் தொடக்கி வைத்தனர். உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களை பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன் பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் துறை மற்றும் பல்வேறு துறை அரங்குகளில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மனுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளில்
மனு அளிக்க அறிவுறுத்தினார்கள்.
முகாம் நடைபெறுவது குறித்த தகவல் துண்டு பிரசுரத்தின் மூலமாக ஊராட்சிமன்ற நிர்வாக தரப்பில் இல்லந்தோறும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து மனுக்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது
உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், விவேகானந்தன், கார்த்திகேயன், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தெய்வானை , மலர்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி