திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் தற்போது உடுமலை கால்வாயில் மூலம் பகிர்மன் கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று காலை பகிர்மான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தற்பொழுது குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று வருகின்றது மேலும் பள்ளியின் முன்பு அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் வீணாகி வருவதால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை
அதிகாரிகள் கால்வாயில் தண்ணீரை உடனே நிறுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.