திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி பகுதிகளில் நேற்று கன மழை பெய்ததால் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் இன்று காலையில் நீர்வரத்து குறைந்த காரணத்தால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இன்று அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.