உடுமலை அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா

80பார்த்தது
உடுமலை அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர் வரவேற்பு விழா சுற்றுச்சூழல் கருத்தரங்கம் மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார் வேதியியல் ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார் சாமி முன்னிலை வகித்தார் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் தலைவர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு வன விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாத்தல் மரக்கன்று நடுதலின் அவசியம் பிளாஸ்டிக்கை தவிர்த்தல் முக்கியத்துவம் பறவைகள் விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன என் பள்ளி மிளிரும் பள்ளி என்னும் தலைப்பில் மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய ப சுமை படை மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர் தமிழாசிரியை ரேணுகா நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி