பல் டாக்டர், செவிலியராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

83பார்த்தது
பல் டாக்டர், செவிலியராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில்
பல் டாக்டர், செவிலியராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜூலை. 29-

திருப்பூர் மாவட்டத்தில் ஆயுஷ் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்து வமனைகளில் காலியாக உள்ள 36 பணியி டங்களை மாவட்ட நல சங்கம் மூலம் ஒப் பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள் ளது. அதன்படி 5 பல் சிகிச்சை நிபுணர், 6 பல் சிகிச்சை உதவியாளர், 9 செவிலியர்கள், 2 ஆயுஷ் டாக்டர், பார்மசிஸ்ட், 7 பல்நோக்கு ஊழியர்கள் உள்பட மொத்தம் 36 பணியிடங் கள் காலியாக உள்ளன. தகுதியுடையவர்கள் வருகிற 9-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நிர்வாக செயலாளர், சுகாதார அலுவலர், மாவட்ட நல சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் 641602 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2478503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் https: //tiruppur. nic. in/notice- category/recruitment/ வரியில் காணலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.

தொடர்புடைய செய்தி