வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருப்பூரில் வரவேற்பு

8276பார்த்தது
இன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட கோவை-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருப்பூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஏறிய பயணிகள் ரயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கோவையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் துறையில் அயோத்தியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்தபோது திருப்பூரில் முக்கியஸ்தர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் திரண்டு கோலாகலமாக வரவேற்பு அளித்தார்கள். மேலும் முதல் பயணம் என்பதால் ரயில் பயணிகள் சங்கத்தினர், மாணவர்கள் முக்கியஸ்தர்கள் என ஏராளமானவர்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் வந்து பார்த்தேன் அமர்ந்து பாட்டுப்பாடியும் நடனமாடியும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். வந்தே வாரத்தில் பயணிப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது என்றும், நவீன வசதிகளுடன் உயர்தரத்தில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தார்கள்.