சரக்கு வேன் திருடிய இருவருக்கு 2 ஆண்டு சிறை

58பார்த்தது
சரக்கு வேன் திருடிய இருவருக்கு 2 ஆண்டு சிறை
சரக்கு வேன் திருடிய இருவருக்கு 2 ஆண்டு சிறை
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு



திருப்பூர் இடுவம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 36). இவர் தீய ணைப்பு கருவிகள் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்காக சரக்கு வேன் வாங்கி பயன்படுத்தி வந்தார். கடந்த 28-5-2021 அன்று சரக்கு வேனை வீட் டின் முன் நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது வேனை காண வில்லை. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் திருட்டு தொடர்பாக மங்கலம் கணபதிபாளையத்தை சேர்ந்த கவுரி சங்கர் (23), ரமீஸ்கான் (23) ஆகிய 2 பேரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு ஜே. எம். 4 கோர்ட்டில்நடந்தது. திருட்டு குற்றத்துக்காக 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1, 000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித் தார். இந்த தண்டனையை எதிர்த்து 2 பேரும் திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், ஜே. எம். -4 கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தி னார். அதன்டி கவுரிசங்கர், ரமீஸ்கான் ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண் டனை, ரூ. 1, 000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்

தொடர்புடைய செய்தி