திருப்பூர்: நீரில் மூழ்கிய பள்ளி மாணவன் உடல் மீட்பு

65பார்த்தது
திருப்பூர்: நீரில் மூழ்கிய பள்ளி மாணவன் உடல் மீட்பு
திருப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் திருமலைசாமி. இவர் பனியன் தொழிலாளி ஆவார். இவரது மகன் அஜய் வயது (13). இவர் பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதினத்தன்று நண்பர்களுடன் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றார். குளிக்கும்போது, அஜய் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் நேற்று காலை சிறுவனின் சடலத்தை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி