சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது

83பார்த்தது
சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
விசாகப்பட்டினம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில்
இன்று முதல் இயக்கப்படுகிறது

கோடை விடுமுறையையொட்டி விசாகப்பட்டினம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் புதன்கிழமைதோறும் இயக்கப்படு கிறது. இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை மாதம் 3-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. புதன்கிழமைகளில் காலை 8. 20 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 12. 55 மணிக்கு கொல்லத்துக்கு சென்ற டையும்.
இந்த ரெயில் புதன்கிழமைகளில் அதிகாலை 1. 22 மணிக்கு சேலத்துக்கும், 2. 45 மணிக்கு ஈரோட்டுக்கும், 3. 30 மணிக்கு திருப்பூருக்கும், 4. 48 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இதுபோல் கொல்லம்-விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரெயில் வியாழக்கிழமைதோறும் இரவு 7. 35 மணிக்கு கொல் லத்தில் புறப்பட்டு மறுநாள் இரவு 11. 20 மணிக்கு விசாகப்பட் டினம் சென்று சேரும். இந்த ரெயில் நாளை (வியாழக்கி ழமை) முதல் ஜூலை மாதம் 4-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3. 33 மணிக்கு போத்தனூருக்கும், 4. 15 மணிக்கு திருப்பூருக்கும், 5. 05 மணிக்கு ஈரோட்டுக்கும், 6. 12 மணிக்கு சேலத்துக்கும் சென்று சேரும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி