வானில் தோன்றிய 6 கோள்களை பார்த்து ரசித்த மாணவர்கள்

66பார்த்தது
வானில் தோன்றிய 6 கோள்களை பார்த்து ரசித்த மாணவர்கள்
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல்இயக்கம்மற்றும் ஊத்துக்குளிகொங்குமெட்ரிக் மேல்நிலைப்பள்ளிஇணைந்து பள்ளி வளாகத்தில் அதிகாலை 4. 30 மணி முதல் 5. 30 மணி வரை வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்தொடர் வரிசையாக தோன்றும் அதிசய நிகழ்வை தொலைநோக்கி, பைனாகுலர் ஆகியவைகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேகமூட்டம் காரணமாக ஒரு சில கோள்கள் சரியாக தெரியாத நிலையில் சந்திரன், செவ் வாய், வியாழன், சனி, ஆகிய கோள்கள் தெளிவாக தெரிந்ததையும் புதன், நெப்டியூன், யுரேனஸ், போன்ற கோள்கள் தெளிவாக தெரி யாததையும் மாணவர்களால் உணர முடிந்தது.
அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இடையேயான வித்தியாசமான பரிமாணங்கள், கோள்கள் சூரியனை மையப்படுத்தி சுற்றுதல் போன்றவைகளை செயல் விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர். நிகழ்ச்சியின் போது மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதிலுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு அறி வியல் இயக்க மாநில செயலாளர் ராமமூர்த்தி, பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி