பார் அமைவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!!

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா கரைப்புதூர் ஊராட்சி அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு தளம் அருகில் மாநில நெடுஞ்சாலை அருகாமையில் புதிதாக அமைய உள்ள அரசு மதுபான கடை மற்றும் தனியார் பார் அமைவதை நிறுத்தக்கோரி பல்லடம் ஒன்றிய கவுன்சிலர். ராஜேந்திரன், தலைமையில் மாவட்ட ஆட்சியர். கிறிஸ்தவராஜ் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வந்து தரிசனம் செய்து செல்வதாகவும் அருகிலேயே கல்லூரி இருப்பதால் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையினால் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் எனவும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளவர்கள் ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என்பதை மனுவாக கொடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடை அமைந்தால் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர். முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். அப்சல், சின்னக்கரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி