ஏற்றுமதி நிறுவனத்தில் மத்திய பிரதேச முதல்-மந்திரி ஆய்வு

51பார்த்தது
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து திருப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த அவருக்கு திருப்பூர் தொழில் துறையினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் பெஸ்ட் கார்ப்பரேஷன் பனியன் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் பனியன் உற்பத்தி திறன் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புலம்பெயர் தொழிலாளர்களிடையே அவர்களது பணி குறித்தும் தங்கும் வசதிகள் குறித்தும் விசாரித்தார். பின்னர் பனி நிறுவன வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த பெஸ்ட் கம்பெனியை வந்து ஆய்வு செய்தேன். நல்ல பெரியதாக உள்ளது. எனக்கு சந்தோசமாக இருக்கு. வேறு வேறு மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேலை செய்து வருகிறார். எல்லா பகுதி மக்களுக்கும் பெஸ்ட் ராமசாமி அவர்கள் வேலை கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கு வேறு மாநிலத்தில் இருந்து மக்கள் வந்து இங்கு தங்கி வேலை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று உஜ்ஜென் பகுதியில் பெஸ்ட் கம்பெனி அங்கு உள்ளது, அங்கேயும் இதுபோன்று ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர். எனது நண்பர் பெஸ்ட் ராமசாமி ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என கூறினார். இதையடுத்து சாலை மார்க்கமாக கோவை புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி