உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

84பார்த்தது
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் டில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுரு கன், ஸ்டாலின், இளங்கோவன், மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ்மின் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அனைத்து கடை களிலும் ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது. மீன்களை குளிர்பதன பெட்டியில் வைத்து அடுக்கும்போது மீன்களுக்கு மேலும், கீழும் நல்ல முறையில் ஐஸ் கட்டிகளை அடுக்கி வைக்க வேண்டும் என்று கடைக்கா ரர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை பார்த்து மக்கள் வாங்க வேண்டும். மீன்களின் செதில்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மீன்களின் மையப்பகுதியில் லேசாக அழுத்தம் கொடுக்கும்போது அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். உணவுப்பொருட்களின் தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி