வருமான வரிநாள் கொண்டாட்டம்

70பார்த்தது
வருமான வரிநாள் கொண்டாட்டம்
வருமானவரித்துறை திருப்பூர் அலுவலகத்தில் 165-வது வருமான வரிநாள் கொண்டாட்டம் நடந்தது. விழாவுக்கு திருப்பூர் வருமான வரித் துறை இணை ஆணையர் மாணிக்க ராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் வருமான வரித்துறை உதவி ஆணையர் கிறிஸ்துராஜ் வரவேற்றார். விழாவில் திருப்பூர் சரகத்தில் முதல் 3 மூத்த தனிநபர் வருமானவரி செலுத் துபவர்களான சையது முகமது, சின்னையா கவுண்டர் அருணாச்சலம், செல்லையா பிள்ளை சந்திரமோகன் ஆகியோர் கவுரவிக் கப்பட்டனர். திருப்பூர் குமரன் பெண்கள் கல் லூரி மாணவிகளுக்கு இடையே வருமான வரித்துறை அலுவலகத்தால் நடத்தப்பட்ட கட் டுரை போட்டிக்கான முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மற்ற மாணவிக ளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி படி வம் தாக்கல் செய்யும்போது போலியான விலக்குகள் கோர வேண்டாம் என்று இணை ஆணையர் மாணிக்கராஜ் கூறினார். முடிவில்வருமான வரி அதிகாரி பிரேமலதா மோகன் ராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி