உலக சமுதாய சேவா சங்கம் திருப்பூர் மண்டலம் சார்பில் அம்மன் நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் புதிய தவமையம் திறப்பு விழா தென்னம்பாளையம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திருப்பூர் அம்மன் நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஆர். சத்யா வரவேற்புரை நிகழ்த்தினார் , திருப்பூர் மண்டல ஸ்மார்ட் இயக்குனரக தலைவர் பேராசிரியர் கே ஏ தர்மலிங்கம் சிறப்புரை வழங்கினார், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் அருள்நிதி டி ஆர் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். அம்மன் நகர் அறக்கட்டளை செயலாளர் து. பேராR. கிருஷ்ணமூர்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் , மேலும் இவ்விழாவில் திருப்பூர் மண்டல நிர்வாகிகள் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சேர்ந்த அறங்காவலர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் அருள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்